கேப்: கடந்த 2014ம் வருடமே பூமியில் வெப்பம் அதிகமாக வெளியிடப்பட்டதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். உலகம் முழுவதும் மக்கள் எரிபொருட்கள் மூலம் அதிகமாக பச்சைவீடு வாயுக்களை வெளியேற்றி சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ஆம் ஆண்டு பூமி அதிகமாக வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA) ) நடத்திய ஆய்வில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் உலக அளவில் பசுமைவீடு வாயுக்கள் ஏற்படுத்தும் மாசுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
19ம் நூற்றாண்டு முழுவதும் 1997 முதல் 10 வருடங்கள் மிகவும் வெப்பமான வருடங்களாக இருந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், வட ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன.
புவிவெப்பமாதலுக்கான காரணத்தால் மனிதர்களால் உருவாக்கப்படும் பச்சைவீடு வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் பாதிப்புகளை பூமிக்கு ஏற்படுத்தி வருவதாக நாசா விண்வெளி கழக இயக்குநர் தெரிவித்தார்.
பெரும் சுற்றுச்சூழல் கேட்டை விளைவிப்பதில் பச்சைவீடு வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகத் தெரிவிக்கும் இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தெளிவாகியுள்ளது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. ஆய்வின்டி ஏற்கெனவே வெப்பமும் மழையும் மிதமிஞ்சிய அளவில் இருந்ததைத் தெரிவித்ததால் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிரீண்லேண்ட்டில் பிரமாண்ட ஐஸ்கட்டிகள் உருவாததால் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது.
எல் நினோ காரணி
1880 லிருந்து பூமிமேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.4 டிகிரி பாரன்ஹீட் (0.8.டிகிரி செல்சியஸ்) இருந்தது. நாசா மற்றும் நோயா மேற்கொண்ட ஆய்வு கடந்த ஆண்டு நிலத்தில் ஏற்பட்டுவரும் மிதமான வெப்பநிலை அதிகமானதன் காரணமாக உலகின் அனைத்துப் பெருங்கடல்களும் நெருக்கடிக்குள்ளாகின என்று கூறுகிறது. 20ம் நூற்றாண்டிற்குப் பிறகான சராசரி வெப்பநிலையாக, உலகம் முழுவதும் நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல்களின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.25 டிகிரி பாரன்ஹீட் (0.69 டிகிரி செல்சியஸ்) உயர்ந்திருப்பதாக NOAA தெரிவிக்கிறது.
பதிவாகியுள்ள இந்த வெப்பஅளவு என்பது எல்நினோவினால் ஏற்படும் காலநிலைமாற்றம் அல்ல என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தை வெப்பமயமாக்கி எல்நினோவின் பெரும்பாதிப்பாக 1998 உள்ளிட்ட கடந்த சில ஆண்டுகள் வரை காணப்பட்டது.
No comments:
Post a Comment