Saturday, January 17, 2015

மணமேல்குடி, அம்மாப்பட்டிணம், கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்.................

மணமேல்குடி,: மணமேல்குடி, அம்மாப்பட்டிணம், கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை செய்து காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதையொட்டி அப்பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் மளிகைக் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெல்லத்தை பரிசோதனை செய்து தரமற்றதை பறிமுதல் செய்தனர். இதேபோல கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment