Saturday, July 6, 2013

அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக பொறுப்பாளர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவில் மோடியின் கை ஓங்கிய நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான பொறுப்பாளராக குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டார். மோடியின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவும் உ.பி.யில் டேரா போட்டு லோக்சபா தேர்தலுக்கான பணிகளை மேற் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று அயோத்தி சென்றார் அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுவிப்போம். நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என்றார். பின்னர் அங்குள்ள கரசேவபுரத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment