Tuesday, January 23, 2018

இந்தியாவின் நிலை இதுதான் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ள 73 சதவீத பணம்: ஆய்வில் தகவல்



புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிடம், நாட்டின் 73 சதவீத பணம் குவிந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்து ஆக்ஸ்பார்ம்  என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
இதில், இந்தியாவில் உள்ள மொத்த செல்வ வளத்தில் 73 சதவீதம், ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கிறது. இது வருவாய் சமநிலை இல்லாததை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. 67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. உலக அளவில் இது மிகவும் மோசம்.

அதாவது, கடந்த ஆண்டில் உலக அளவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 82 சதவீத செல்வ வளம் குவிந்து கிடக்கிறது. 370 கோடி ஏழைகளின்
வருவாயில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களின் செல்வ வளம் கடந்த ஆண்டில் 20.9 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டின் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு போதுமான ஒன்றாகும் என அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment