Tuesday, November 26, 2013

சிரியா போர்: 11 ஆயிரம் சிறார்கள் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் நடைபெற்று வரும் போரில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் பலியாகி உள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதில் குறைந்தது ஆயிரம் பேராவது வேண்டுமென்றே இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள், (அவர்களில் பலர் ஒரு வயதுக்கு குறைவானவர்கள்) சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பி.பி.சி.க்கு வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.

ஆயினும் இப்படியாக இறந்தவர்களில் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களில் ஆர்ட்டிலறி குண்டுகள் விழுந்து வெடித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள். சிரியாவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்துத் தரப்பையும் கோரியுள்ள இந்த அறிக்கை, இப்படியான அக்கிரமங்களில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை வர வேண்டும் என்று கோரியுள்ளது.

No comments:

Post a Comment