Sunday, January 18, 2015

பாரிசில் 17 உயிர்கள் – சிரியாவில் 350000 உயிர்கள் பாரபட்சம் ஏன்? எர்துகான்.......................

16.01.15 அன்று இளம் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட துருக்கி அதிபர் எர்துகான் பேசியதாவது,
"பாரிஸ் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதற்கு வருத்தப்படும் மேற்குலகத் தலைவர்கள் மூன்றரை லட்சம் பேர் சிரியாவில் கொல்லப்பட்ட பின்பும் ஏன் உணர்வற்று உள்ளனர்.?
பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நாடுகள் மட்டும் தான் உலகமா? உலகம் அவ்வைந்து நாடுகளை விடவும் பெரியது.
அனைவரின் உயிரும் பாரிசில் கொல்லப்பட்ட 17 பேரின் உயிர்களைப் போன்று மதிப்பு மிக்கவையே.
ஏன் பாரிஸ் நினைவஞ்சலி கூட்டத்திற்கு சென்ற உலகத் தலைவர்கள் சிரியாவில் கொல்லப்பட்டுள்ள மூன்றரை இலட்சம் பேர்களின் விஷயத்தில் மௌனம் காக்கின்றனர்?.
சிரியா அகதிகளுக்காக இதுவரை நாங்கள் ஐந்து பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆனால் இதுவரை ஐரோப்பாவில் இருந்து வெறும் 250 மில்லியன் டாலர்கள் மட்டுமே வந்துள்ளது.
பாரிஸ் தாக்குதலை அடுத்து நடந்த தீவிரவாத எதிர்ப்பு பேரணியில் குழந்தைகளின் இரத்தத்தை கையில் தேய்த்துக் கொண்டவர் (நெதன்யாகு) அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதா?
எவ்வளவு தைரியம்? எவ்வளவு இறுமாப்பு இருக்க வேண்டும்? அது மட்டுமா? பாரிஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவிக்கின்றது?
காசாவில் 2700 குழந்தைகளை கொன்ற நாட்டுக்கு அந்த தகுதி இருக்கின்றதா?
இஸ்ரேல் அரசுக்கு சாபம் ஏற்படட்டுமாக!
நான் இஸ்ரேல் மக்களை கூறவில்லை. அந்நாட்டைத் தான் கூறுகிறேன்.
தொடர்ந்து சார்லி ஹெப்டே குறித்து அவர் பேசியதாவது,
“சார்லி ஹெப்டே எனும் பிரெஞ்சு வார இதழ் ஆத்திரமூட்டும் வெளியீடுகளினால் வெறுப்பையும், இனவெறியையும் கிளப்பியுள்ளது.
இதுவே அப்பத்திரிக்கையின் வேலை. முஸ்லிம்களைப் பற்றியும், கிறிஸ்தவர்களைப் பற்றியும், இன்னும் சொல்வதெனில் யாரையாவது பற்றியும் ஆத்திரமூட்டும் விஷயங்களை வெளியிடுவதே அதன் வாடிக்கையாக உள்ளது. இதன் மூலமே அது பிரபலத்தைத் தேடிக்கொள்கிறது.
நிச்சயமாக இதனை சுதந்திரம் என்று கூற இயலாது. ஏனெனில், சுதந்திரம் என்று கூறிக் கொண்டு அதனை மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திட அப்பத்திரிக்கை பயன்படுத்தி வருகிறது.
முஸ்லிம்களாகிய நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். எந்த வரம்பும் அற்ற சுதந்திரம் என்பது எங்கேயும் கிடையாது.
கடந்த ஏழாம் தேதி அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீதான தாக்குதலில் 17 பேர் இறந்த சம்பவத்திற்கு பின்பு மீண்டும் அது தனது அட்டைப் படத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கார்ட்டூனை வெளியிட்டு தேவையற்ற பதட்டத்தை வெளியிட்டுள்ளது.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் இறைத்தூதர்களாகப் போற்றி மதிப்பவர்களை முஸ்லிம்களாகிய நாங்கள் போற்றி மதிக்கின்றோம். அதைப் போன்று எங்களின் இறைத்தூதரும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும்.
எந்த மதத்தையும் நம்பாத நாத்திகர்களாக நீங்கள் இருந்தால் எனது மானம் – மரியாதைக்கு நீங்கள் மதிப்பளித்தே ஆக வேண்டும்.
அவ்வாறு மதிப்பளிக்காமல் வெறுப்பையும், இனவெறியையும் தூண்டினால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு எர்துகான் பேசினார்.

No comments:

Post a Comment