ராங்கியா:அஸ்ஸாமில் போலீஸ்காரர் ஒருவரால் சிறுமி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். ஆத்திரம் அடைந்த கிராமவாசிகள் போலீஸ் முகாம் மீது கல்வீசி தாக்கினர். கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் காமரூப் மாவட்டம் ராங்கியா சப்-டிவிஷனில் காச்லியா என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் முகாமில், கமல் கிருஷ்ண நாத் என்ற போலீஸ்காரர் வெள்ளிக்கிழமை பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் தனியே வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கிராமத்துக்குச் சென்ற அந்தச் சிறுமி நடந்த சம்பவத்தை ஊராரிடம் கூறினார். ஆத்திரமடைந்த கிராமத்தினர் திரண்டு வந்து போலீஸ் முகாம் மீது கற்களை வீசினர்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கலைக்க முதலில் தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. இதில் கூட்டம் கலையாததால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து கூட்டம் கலைந்தது. இந்த மோதலில் போலீஸார் சிலரும்,
கிராம மக்கள் சிலரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டார்.

அங்கு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த போலீஸ் முகாம் கலைக்கப்பட்டது. இதற்கிடையே, சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment