Saturday, July 27, 2013

பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை தேவை – எஸ்.டி.பி.ஐ!


SDPI NATIONAL PRESIDENT ASYEEDபுதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மா கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷஹ்ஸாத் அஹ்மதை விசாரணை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது அதிர்ச்சியடையச் செய்தது என்று எஸ்.டி.பி.ஐ கூறியுள்ளது. இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது. இச்சம்பவத்தில் நீதி விசாரணை தேவை. என்கவுண்டர் போலி என்பதை தெளிவுப்படுத்தும் ஆதாரங்களை பரிசோதிக்காமலேயே டெல்லி போலீசின் வாதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.

குஜராத்தில் நிகழ்ந்த 17 போலி என்கவுண்டர் படுகொலைகளுக்கு பின்னால் செயல்பட்ட ஐ.பி இயக்குநர்தாம் பாட்லா ஹவுஸ் சம்பவத்திற்கும் ரகசிய தகவல் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது. நீதி விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை, போலீஸின் தன்னம்பிக்கையை குலைத்து விடும் என்று கூறி மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்ததற்கு , பாட்லா ஹவுஸில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள், ஷஹ்ஸாத் தண்டிக்கப்படவேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதே காரணம். ஐ.பி மற்றும் புலனாய்வு ஏஜன்சிகளின் கற்பனை இயக்கமான இந்தியன் முஜாஹிதீனுடன் தொடர்பு என்ற வாதத்திற்கு ஆதாரமில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது பாராட்டத்தக்கது.
பாட்லாஹவுஸில் என்ன நடந்தது? என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. ஐ.பி அளித்த தவறான தகவலின் அடிப்படையிலா முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்? என்கவுண்டர் நிபுணர்களான போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டரீதியாக கூடுதல் அதிகாரம் உண்டா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இவ்வாறு எ.ஸயீது தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/sdpi-national-president-asyeed/#sthash.KhAD63Mn.dpuf

No comments:

Post a Comment