Wednesday, April 4, 2012

கூட்டாக புதைத்த வழக்கு: 27 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!


punjab mass cremation case - NHRC orders Rs 27.94 cr relief
புதுடெல்லி:பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொலைச்செய்து கூட்டாக புதைத்த 1513 பேரின் உறவினர்களுக்கு 27.94 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1984-94 காலக்கட்டத்தில் அமிர்தரஸ், மாஜிதா, டான் டரன் ஆகிய மாவட்டங்களில் 2097 பேரின் உடல்கள் கூட்டாக புதைக்கப்பட்டன. இதில் அடையாளம் காணப்பட்ட 1513 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆய்வுச்செய்ய 1996-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு பொறுப்பை அளித்தது.
195 பேர் போலீஸ் கஸ்டடியில் இறந்தனர். 1318 பேரை போலீஸ் புதைத்தது. 532 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. மூன்று மாவட்டங்களில் இறந்த உடல்களை புதைத்தது ஆய்வில் தெரியவந்ததாக கமிஷனின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

No comments:

Post a Comment