Saturday, July 27, 2013

ஹமாஸுடன் தொடர்பாம் :முர்சியை சிறையிலடைத்த ராணுவ சர்வாதிகார அரசு!

கெய்ரோ:ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட இயக்கமான ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாக கூறி 15 நாட்கள் எகிப்தில் முதன் முதலாக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்ஸியை ராணுவ சர்வாதிகார அரசு 15 நாட்கள் சிறையில் அடைத்தது. ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது காஸ்ஸாவை ஆளும் ஹமாஸுடன் சேர்ந்து முர்ஸி சதித்திட்டம் தீட்டினார் என்ற வழக்கில் கெய்ரோ நீதிமன்றத்தின் உத்தரவைத்தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது இஃவான். முபாரக்கின் ஆட்சி திரும்பவும் வருவதற்கான அறிகுறிதான் இச்சம்பவம் என்று இஃவானின்
செய்தி தொடர்பாளர் ஜிஹாத் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார். இதனிடையே எகிப்தில் மோதல் சூழல் உருவாகியுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் முர்ஸியின் ஆதரவாளர்களும், ராணுவ ஆதரவாளர்களும் குழுமியுள்ளனர்.

No comments:

Post a Comment