Saturday, July 27, 2013

ஷஹ்ஸாதிற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு என்பதற்கு ஆதாரமில்லை – நீதிமன்றம்!


Batla House Encounterபுதுடெல்லி:பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த போலி என்கவுண்டர் சம்பவத்தின் போது டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் சர்மா சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷஹ்ஸாத் அஹ்மதிற்கு இந்தியன் முஜாஹிதீனுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாட்லாஹவுஸில் ரெய்டு நடத்தியதற்கு போலீஸ் கூறும் காரணம், அங்கு இந்தியன் முஜாஹிதீனின் உறுப்பினர்கள் ஒளிந்திருந்தார்கள் என்பதாகும். 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு நடத்திய இந்தியன் முஜாஹிதீனின் உறுப்பினர்கள் என்று கூறி ஷஹ்ஸாதையும், அங்கு தங்கியிருந்த முஸ்லிம் மாணவர்களையும் பிடிக்க பாட்லா ஹவுஸில் ரெய்டு நடத்தியதாக டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு கூறுகிறது. கொல்லப்பட்ட ஆதிஃப் அமீனும், முஹம்மது ஸாஜிதும், தப்பிச் சென்ற ஜுனைதும் இந்தியன் முஜாஹிதீனின் உறுப்பினர்கள் என்றும் போலீஸ் கூறியது.

மோகன்சந்த் சர்மாவை இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்படும் ஷஹ்ஸாத் அஹ்மத் சுட்டுக்கொன்றதாக போலீஸ் வழக்குப் பதிவுச் செய்தது. சர்மாவின் கொலையில் ஷஹ்ஸாத் குற்றவாளி என்று நேற்று முன் தினம் சாங்கேதில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதே தீர்ப்பில் தான் ஷஹ்ஸாத், இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது. ஷஹ்ஸாத் மற்றும் பாட்லாஹவுஸில் உள்ள 108-ஆம் ப்ளாட்டில் தங்கியிருந்த இதர நபர்களுக்கும் இந்தியன் முஜாஹீதின் அமைப்புடன் தொடர்பு இல்லை என்று ஷஹ்ஸாதின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதத்தை எடுத்துவைத்திருந்தார். எதிர் தரப்பு வழக்குரைஞரின் வாதம் சரி என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.
ஆனால், இவ்வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினரா? இல்லையா? என்பது முக்கியமில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அதேவேளையில் அரசு தரப்பு வாதங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருந்தபோதிலும் நீதிமன்றம் போலீஸ் கூறியதை அட்சர பிசகு இல்லாமல் அங்கீகரித்துள்ளதாக ஷஹ்ஸாதின் குடும்பமும், வழக்குரைஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
- See more at: http://www.thoothuonline.com/batla-house-encounter/#sthash.1ip9Ftr6.dpuf

No comments:

Post a Comment