Thursday, June 20, 2013

மோடி -சர்வாதிகாரி, ராஜ்நாத் -குள்ள நரி :அத்வானியின் நண்பர் சுதீந்திர குல்கர்னி கூறுகிறார்!


sudheendrakulkarniபுதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி சர்வாதிகாரி என்றும், பா.ஜ.கவின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் ஒரு குள்ள நரி என்றும்அத்வானிக்கு மிகவும் நெருக்கமான சுதீந்திர குல்கர்னி ரெடீஃப் டாட் காம் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி-அத்வானி இடையேயான பதவிச் சண்டை இதுவரை முடிவுக்கு வரவில்லை என்பதை குல்கர்னியின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அக்கட்டுரையில் கூறியிருப்பது: மோடி பிரதமர் ஆவார் என்பது தவறான நம்பிக்கை. ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமரவைக்க விரும்புகின்றனர். ஆனால், மக்கள் விரும்பும்(?) தலைவர் ஒதுக்கப்படுகிறார்,வேதனைக்கு ஆளாக்கப்படுகிறார். 85 வயதான அத்வானிக்கு நாட்டிற்காகவும்(?), கட்சிக்காகவும் இனியும் ஏராளாமான சேவைகளை அளிக்கவேண்டியுள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியவற்றில் இருந்து வாபஸ் பெறவில்லை. ஒரு சுயநலமிக்க தலைவருக்கு இரண்டு குரல்கள் உள்ளன. அவருடைய சொந்த மாநிலத்தைச் சார்ந்த ஒரு சக உறுப்பினர் திடீரென உயர் பதவியை அடைகிறார். ஆனால், சுயநலமற்ற(?), கட்சியை காலங்களாக வளர்த்து வந்த ஒரு தலைவர் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார் இவ்வாறு அக்கட்டுரை கூறுகிறது.
மோடி, அத்வானியை சந்திப்பதற்கு முன்பு இம்மாதம் 17-ஆம் தேதி இக்கட்டுரை இணையதளத்தில் வெளியானது. அத்வானியின் ஆலோசகர்களில் ஒருவர் தாம் குல்கர்னி.முன்னாள் பிரதமர் வாஜ்பேய்க்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ்ஸையும் குல்கர்னி விமர்சிக்கிறார். 2005-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஜின்னாவை மதசார்பற்ற தலைவர் என்று அத்வானி வெளியிட்ட கருத்தில் சர்ச்சையை கிளப்பிய சிந்தனை திறன் இல்லாத அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் என்று குல்கர்னி கூறுகிறார்.
அத்வானியை இனிமேலும் வேதனைப் படுத்தினால் பா.ஜ.கவின் வீழ்ச்சிக்கு அது ஊக்கமூட்டும் என்று குல்கர்னி தனது கட்டுரையில் எச்சரிக்கிறார்.
- See more at: http://www.thoothuonline.com/narendra-modi-an-autocrat-rajnath-singh-foxy-says-lk-advanis/#sthash.XLTbX237.dpuf

No comments:

Post a Comment