Wednesday, June 6, 2012

கொலை மிரட்டல்:அஸ்மா ஜஹாங்கீர் கூறுகிறார்!


Pak security out to kill me,says Asma Jahangir
லாகூர்:பாக். பாதுகாப்பு பிரிவு தன்னை கொலைச்செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் கூறியுள்ளார். இத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்த அஸ்மா, வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
ஜனநாயக ஆர்வலரும், வழக்கறிஞருமான அஸ்மாவின் மீது பல முறை பாக்.உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல் வெளியாகியிருந்தது. அண்மையில் தான் பங்கேற்கவிருந்த இடத்தை ஆராய வழக்கறிஞர்கள் நடத்திய முயற்சியை ஐ.எஸ்.ஐ தடுத்ததாக அஸ்மா குற்றம் சாட்டுகிறார். இன்னொரு தடவை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து தன்னை தாக்க முயன்ற இருவரை வழக்கறிஞர்கள் பிடித்ததாகவும், அவர்களில் ஒருவர் வசம் ஐ.எஸ்.ஐயின் அடையாள அட்டை இருந்ததாகவும் அஸ்மா கூறுகிறார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாக்.பாதுகாப்பு படையினர் நடத்தும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதே தன் மீதான மிரட்டல்களுக்கு காரணம் என அஸ்மா கருதுகிறார்.

No comments:

Post a Comment