
மாஸ்கோ:2014-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆஃப்கானில் அமைதிக்கான புதிய திட்டத்துடன் நேட்டோவும் ஆஃப்கான் அரசும் செயல்படும் என்று நேட்டோவின் செயலாளர் அண்டர்ஸ் பாக் ராஸ் முச்சென் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கனின் பாதுகாப்பு படை பொறுப்பேற்றுக்கொண்ட பின் ஆஃப்கன் படைக்கு நேட்டோ பயிற்சிகளையும் இதர உதவிகளையும் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருடத்திற்கு 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியையும் இந்த திட்டத்திற்கு நேட்டோ அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தாங்கள் தற்போது முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும் அதன் பின்னரும் ஆஃப்கனில் செயல்பட தெளிவான பாதை ஒன்றை தாங்கள் வகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வருகின்ற 2014-ஆம் ஆண்டு நேட்டோ படைகள் ஆஃப்கனிலிருந்து வெளியேறியப் பின்னர் ஆப்கானைச் சேர்ந்த 300,000 ராணுவ வீரர்களும் மற்றும் காவல்துறையும் இணைந்து ஆப்கானின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment