Thursday, January 23, 2014

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னர் மைதீன் சரமாரியாக குத்திக் கொலை! வழக்கை திசை திருப்புகிறதா காவல்துறை?

மதுரை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி மதுரையைச் சார்ந்தமன்னர் மைதீன் நேற்று(செவ்வாய்க்கிழமை) காலையில் சரமாரியாக குத்திக்கொலைச் செய்யப்பட்டார்.துரை நெல்பேட்டை கரீம்ஷாபள்ளிவாசல் 4–வது தெருவை சேர்ந்தவர்அப்துல்அஜீஸ். இவருடைய மகன் மன்னார் மைதீன் (வயது 35). இவர் தமிழக மக்கள்ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவராக பதவி வகித்து, தற்போது மாநில இளைஞரணிதுணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். அத்துடன், ரியல் எஸ்டேட் தொழிலும்,ஆடுகளை வெட்டிக் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.கடந்த 2005–ம் ஆண்டு கங்காதரன் என்ற பூசாரியும், இந்து அமைப்பைச் சேர்ந்தகாளிதாஸ் என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட மன்னார் மைதீன் விடுதலை ஆகிவிட்டார்.நேற்று காலை 11.30 மணிக்கு மன்னார் மைதீன், முனிச்சாலை ஓபுளாபடித்துறைஅருகில் உள்ள பழைய பேப்பர் கடையில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டுஇருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்தனர்.அவர்கள் ஒருவன் திடீரென்று வண்டியை விட்டு இறங்கி மன்னர்மைதீனின் கைகளைபிடித்து கொண்டான். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கையில்கத்தியால் மன்னார் மைதீனின் நெஞ்சு, வயிறு, கழுத்து என சரமாரியாக குத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.மன்னர்மைதீனின் குடல் சரிந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்குடாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்அளிக்காமல் மன்னர்மைதீன் பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர்சமந்தரோகன்ராஜேந்திரா, உதவி கமிஷனர் துரைச்சாமி ஆகியோர் விரைந்து வந்துவிசாரணை நடத்தினர்.மன்னர்மைதீன் கொலையைத் தொடர்ந்து, பெரிய ஆஸ்பத்திரி, நெல்பேட்டைபகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காதவாறு தடுக்க, போலீசார்குவிக்கப்பட்டனர்.இந்த கொலை தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர்.கொலை செய்யப்பட்ட மன்னார் மைதீனுக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் இவ்வழக்கில் மன்னர் மைதீனின் முன்னாள் கூட்டாளி இப்ராஹீம் ஷாமுன்விரோதம் காரணமாக மைதீனை கொலைச் செய்திருக்கலாம் என்று கூறி அவர்உள்பட 3 பேரை தேடிவருவதாக போலீஸ் கூறுகிறது.பூசாரி கங்காதரன், காளிதாஸ் கொலை வழக்குகளில் மன்னர்மைதீன் கைதாகிவிடுதலையானவர்.எனவே இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்கு இக்கொலைவழக்கில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஆனால், போலீஸ் அந்தகோணத்தில் விசாரணையை நடத்தாமல் இப்ராஹீம் ஷா மீது பழியைப் போட்டு அவரைதேடிவருவதால் இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைதுச்செய்யப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment