Saturday, January 25, 2014

அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர்!- வெள்ளை மாளிகை அறிக்கை!


rape 2வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்களில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம். இதேபோல அமெரிக்க ஆண்களில் 16 லட்சம் பேர் ஓரினச்சேர்க்கை வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமெரிக்கவாழ் இந்திய பெண்கள், அலாஸ்கா பழங்குடியினப் பெண்கள் 27 சதவீதம் பேரும், கறுப்பினப் பெண்கள் 22 சதவீதமும், வெள்ளை இனப் பெண்கள் 19 சதவீதம் பேரும், ஸ்பானிஷ் இனப் பெண்கள் 15 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வரும் பெண்கள் பாலியல் வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஒபாமா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பலாத்கார சம்பவங்களை தடுப்பது தொடர்பாக கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
பாலியல் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment