Thursday, January 23, 2014

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை: ஈரானுக்கான அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற்றது!

நியூயார்க்: சிரியா எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் அமெரிக்காவின் கடும்எதிர்ப்பினால் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு ஈரானுக்கு விடுத்த அழைப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன்செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றார்.ஜெனீவா மாநாட்டின் அடிப்படைத் தத்துவங்களுக்கும் அதன் நோக்கங்களுக்கும்இணங்கி நடக்க ஈரான் தயாராக இல்லை. எனவே அந்த நாட்டின் பங்கேற்பு இன்றிஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் பான்-கீ-மூன்தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள தகவல் ஏமாற்றம்அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிரியாவில் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் சண்டயை நிறுத்தும் நோக்கில்அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கவிருக்கும் நிலையில் ஈரான் போன்ற நாடுகள்மாநாட்டில் பங்கேற்பது
அமைதி நடவடிக்கைகளுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும்என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.மாநாட்டில் ஈரான் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் சிரியாவில் மாற்று அரசைஅமைக்கும் முயற்சி வெற்றிபெறும், ஜெனீவா முதல் மாநாட்டின் தீர்மானங்களைஎளிதில் அமலாக்கம் செய்ய இயலும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின்செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.சிரியாவின் ஆதரவு நாடான ரஷியா, ஜெனீவா மாநாட்டில் ஈரான் பங்கேற்பதுஅவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.ஜெனீவா மாநாட்டில் பங்கேற்க ஈரானுக்கு விடுத்த அழைப்பை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன், திரும்பப் பெற்றது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுதவறானது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ்தெரிவித்துள்ளார்.இது ஐ.நா.வின் நற்பெயருக்கு எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர்குறிப்பிட்டார்.ஆனால் ஜெனீவா முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்துகையெழுத்திடாத நிலையில் 2வது மாநாட்டில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லைஎன்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.மாநாட்டில் பங்கேற்க ஈரானுக்கு விடுத்த அழைப்பை திங்கள்கிழமைக்குள்திரும்பப் பெறாவிட்டால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்றுசிரியா தேசியக் கூட்டணி எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் ஈரானுக்கு விடுத்திருந்த அழைப்பை ஐ.நா. திரும்பப்பெற்றிருப்பதை வரவேற்றுள்ள சிரியா தேசியக் கூட்டணி இந்த மாநாட்டில்பங்கேற்பதாக உறுதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜெனீவா மாநாட்டில் செல்வாக்குள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்காத நிலையில்சிரியா பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றுஈரான் தெரிவித்துள்ளது.ஈரான் இல்லாமல் சிரியா பிரச்னைக்கு உண்மையான தீர்வு ஏற்படாது என்பதைஅனைவரும் அறிவார்கள் என்று அந்த நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர்அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் புதன்கிழமை அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment