புதுடெல்லி: வக்ஃப் வளர்ச்சி ஆணையத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார். சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வக்ஃப் வளர்ச்சி ஆணையத்தின் துவக்க நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
சச்சார் கமிஷன் அறிக்கை பரிந்துரைகளின் தொடர்ச்சியாக வக்ஃப் ஆணையம் துவக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வக்ஃப் சொத்துகள் அதிகமான நாடு இந்தியா.
பதிவு செய்யப்பட்ட 4.9 லட்சம் வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் வருடாந்திர
வருமானம் வெறும் 163 கோடி மட்டுமே. இச்சொத்துகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் வருடத்திற்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துக்களின் வளர்ச்சிக்கான நிதியை திரட்ட திட்டங்கள் தயாரிக்கப்படும். மாநில வக்ஃப் போர்டுகள் மற்றும் முத்தவல்லிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment