நாகப்பட்டினம்: அண்மையில் மோடி தேநீர் விற்கத்தான் லாயக்கானவர் என்று மணிசங்கர் அய்யர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் துணைத் தலைவரான ஹெச். ராஜா, மணிசங்கருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து ஹெச். ராஜா கூறியதாவது:
மோடி குறித்த மணிசங்கர் அய்யரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோல மீண்டும் பேசினால் பா.ஜ.க. தொண்டர்களின் கோபத்துக்கு நேரடியாக ஆளாக நேரிடும்.
இவ்வாறு மிரட்டல் விடுத்து அவர் பேசினார்.
No comments:
Post a Comment