Wednesday, January 29, 2014

சிரியாவில் துடைத்தெறியப்படும் உலக வரலாறு!

டமஸ்கஸ்: உலகம் கண்ட சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் இனங்களின் வரலாறு அலங்கரிக்கும் சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் உள்நாட்டுப் போர், மிகப் பெரிய பாரம்பரியத்தை துடைத்து அழித்து வருகிறது.
புராதன நாகரிகங்களின் வளமான பகுதியான சிரியாவில் யுனெஸ்கோ பாதுகாக்கும் ஏராளமான புராதன மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாக கார்டியன் பத்திரிகை கூறுகிறது. பத்திரிகையின் புகைப்பட நிபுணர் மார்டின் சுலோவ், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புராதன மையங்களின் ஃபோட்டோக்களையும் தற்போதைய வரலாற்றையும் ஒப்பீடு செய்து விவரிக்கிறார்.
பாபிலோனியர்கள், அஸீரியர்கள், பாரசீகர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், அரபுக்கள், சிலுவைப் போர் காலக்கட்டம், உஸ்மானியா ஆட்சி காலம் உள்ளிட்ட வரலாற்றுக்களை உள்ளடக்கிய பாரம்பரியம் சிரியாவுக்கு உண்டு. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல நாகரிகங்களின் மீதங்களெல்லாம் இப்போழுது அழிந்துள்ளன.
ஹலப், ஹும்ஸ் மாகாணங்களில் உள்ள அனைத்து புராதன மையங்களும் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் உள்ளன. தேராவில் உமர் இப்னு கத்தாப் மஸ்ஜித், ஹலபில் உள்ள உமய்யத் மஸ்ஜித் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

No comments:

Post a Comment