Thursday, December 5, 2013

மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் இல்லை : அமெரிக்க அதிகாரி

மோடிக்கு விசா வழங்கும் விஷயத்தில் அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். மேலும், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், திடீரென அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்தினார். 

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே, அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கேட்டிருந்தார் மோடி. அவருக்கு உடனடியாக விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து வருகிறது. இதனால் சர்ச்சை நீடிக்கிறது. 

இந்த நிலையில் ஒபாமா அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய மாநிலங்களின் உதவி செயலர் நிஷா தேசால் பிஸ்வால் கூறுகையில், இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலை அமெரிக்கா உற்று நோக்கி வருகிறது. பாஜ பிரதம வேட்பாளர் மோடிக்கு அமெரிக்க விசா வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்க சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தனி மனிதருடைய விண்ணப்ப படிவத்தை போல ஆய்வுக்கு பிறகு மோடிக்கு விசா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். அமெரிக்காவில் அரசு தொடர்பான பயணங்களுக்கு மட்டும் ஏ1 விசா வழங்கப்படுகிறது. சுற்றுலா விசா வழக்கமான நடைமுறையின்படி வழங்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment