'உண்மையின் உரைகல்' என்று சொல்லிக் கொண்டு அறிவுக்கு ஒவ்வாதவற்றை செய்திகளாக்கி பக்கங்களை வீணடிப்பதோடு, புராண கட்டுக்கதைகளையும், ஜோதிடம் என்ற பெயரில் மூடநம்பிக்கையையும் முடிந்த மட்டில் வளர்த்து வருகிறது தினமலர்.
மயிலாப்பூர் சலூன் கடை ஒன்றில் சேவிங் செய்த அழுக்கைத் துடைக்க வைத்திருந்த (17 - 11- 2013) தினமலரில் (சென்னை பதிப்பு) பக்கம் 10 இல் வந்துள்ள செய்தி ஒன்று கவனத்தை ஈர்த்தது. முகச்சவரம் செய்வதை நிறுத்தச்சொல்லிவிட்டு வாங்கி வாசித்தேன். டிசம்பர் மாதத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகள் தலா ஐந்துமுறை வருகிறது என்றும் அவ்வாறு வருவது விசேசம் என்று வல்லுனர்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறியது.
நாஸா அல்லது இஸ்ரோ விஞ்ஞானிகளாக இருக்குமோ என்று பார்த்தால் சோதிட நிபுணர்களாம்! காசுக்காக பொய்ச் செய்திகள் போட்டு பலரது வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் என்பது தெரிந்தாலும், தினமலரின் அந்தச் செய்தியை உறுதி செய்வதற்காக கையிலிருந்த செல்பேசி காலண்டரில் சோதித்ததில், வாரத்தின் கிழமைகள் ஒவ்வொரு மாதத்திலும் நான்கு அல்லது ஐந்துமுறைகள் வருவது தெரிந்தது.
சாதாரண இவ்விசயம் ஐந்தாம் வகுப்பு மாணவன்கூட குழப்பமின்றி சொல்லிவிடுவான். ஆனால், தினமலரோ இவ்வாறு ஐந்து முறை வருவது அபூர்வமானது என்றதோடு, இதுபோன்று 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது!
கணினி மட்டுமின்றி கையிலுள்ள செல்பேசியிலேயே எந்த வருடத்தின் நாட்காட்டியையும் நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் என்பது தினமலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்கள் இதற்கு முன்பு 1991,1996,2002 ஆகிய வருடங்களின் டிசம்பர் மாதத்திலும் வந்துள்ளன. மேலும், 2019,2024 ஆகிய வருடங்களிலும் வருகிறது.
அதே போன்று மற்றொரு சிறப்பாக, "டிசம்பர் மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றான 8 ஆம் தேதி, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என்பது, இந்த நாளின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது" என்று கூறியுள்ளது. இதில் என்ன சிறப்பு உள்ளது? தினமலரின் எடிட்டருக்குத்தான் வெளிச்சம்!
இப்படியாக, பொதுஅறிவற்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதற்குமுன் குறைந்த பட்சம் கணினியிலோ அல்லது செல்பேசியிலோ சோதித்துக் கொண்டால் குடிமுழுகி விடப்போவதில்லையே! இந்த லட்சனத்தில் கொலைகாரன் மோடி பிரதமராவைதையே பலரும் விரும்புவதாக புழுகி வருகிறது தினமலர். இதற்காக பாஜகவிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். ஆனால்,பொதுவான செய்திகளில் சோதிட புழுகுகளையும் பொய்களையும் கலந்து மனம்போன போக்கில் செய்திகளை ஏன் வெளியிட வேண்டும்?
இதே போன்ற முரணான செய்தியை கடந்த வருடமும் தினமலர் வெளியிட்டிருந்ததை நடுநிலை பத்திரிக்கைகள் தோலுரித்தன. எனினும் அத்தகைய தவறுகளை திருத்திக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் இத்தகைய செய்திகளை வெளியிடுவதை வைத்துப் பார்க்கும்போது தினமலர் ஆசிரியர் குழுவில் 'சோதிட தீவிரவாதிகளும்' ஊடுருவி உள்ளனரோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது!
- சந்தானம்

No comments:
Post a Comment