Tuesday, November 19, 2013

தூத்துக்குடியில் பயங்கரம்: பாஜக நிர்வாகி கொலை!

தூத்துக்குடி: நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பா.ஜ.க நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர். அவருக்கு 40 வயதாகிறது. நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜவஹர், ஆழ்வார் திருநகரி பகுதியின் பா.ஜ.க ஒன்றிய பொதுச் செயலாளராவார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அவர் தம் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது, ஆத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்னர் வழிமறித்த கும்பல் ஒன்று அவரைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

சம்பவ இடம் வந்த காவல்துறையினர் ஜவஹரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீட்டு விளையாடியதில் வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவருக்கும் ஆத்தூர் பொன்ராஜ் என்பவருக்கும் இடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு சுயம்புவை, பொன்ராஜ் தரப்பினர் கொலை செய்தனர்.
இதற்குப் பழிக்குப் பழியாக 2011 ஆம் ஆண்டு சுயம்பு தரப்பினர், பொன்ராஜை கொலை செய்தனர். 2012 ஆம் ஆண்டு சுயம்பு தரப்பைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகியான பொன்ராஜா என்பவரை பொன்ராஜ் தரப்பினர் கொலை செய்தனர்.
தற்போது கொலையாகியுள்ள பா.ஜ.க நிர்வாகி ஜவஹர் பொன்ராஜ் உறவினராவார். எனவே, சுயம்பு தரப்பினர், முந்தைய கொலைக்குப் பழிவாங்க இவரைப் படுகொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலைக்கும் போலீஸ் பக்ருதீன்,பன்னாஇஸ்மாயில் ஆகியோர் தான்  என்று சொன்னாலும் சொல்லுவாங்க.

No comments:

Post a Comment