Tuesday, November 19, 2013

அப்துல் நாஸர் மஃதனிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிட்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

Abdul Nasser Madani_0_1
புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு அவருடைய விருப்பப்படி தனியார் மருத்துவமனையான மணிப்பால் மருத்துவமனையில் சிகிட்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.சிகிட்சைக்குப்பிறகு அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் ஹெச்.எல்.கோகலே, ஜெ.சலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

சிகிட்சைக்கான செலவை கர்நாடகா அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். மணிப்பால் மருத்துவமனை சிகிட்சை அளிக்க மறுத்தால் அரசின் கீழ் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கவேண்டும்.மருத்துவமனையில் மஃதனிக்கு தனியாக அறை வழங்கவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
கர்நாடகா அரசுக்காக ஆஜரான வழக்குரைஞர் அனிஷா ஷெணாய், மஃதனிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். டெல்லி, சூரத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும், பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் இடையே தொடர்புள்ளது என்றும், சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகளுக்கும் மஃதனிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.ஆனால், மஃதனியை இக்குண்டுவெடிப்புகளுடன் எவ்வாறு தொடர்பு படுத்துகின்றீர்கள் என்று கர்நாடகா அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மஃதனியின் சிகிட்சை மற்றும் கண் சிகிட்சைக்கு பிறகு ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.மஃதனிக்காக வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷண், ஹாரிஸ் பீரான், அமீர் முஸ்தாக் ஆகியோர் வாதிட்டனர்.

No comments:

Post a Comment