Tuesday, November 19, 2013

ஆம் ஆத்மி வேட்பாளர்களில் 11 பேர் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்!

புதுடெல்லி:சாதாரண மக்களின் கட்சி என்று அழைக்கப்படும் ஆம் ஆத்மி
கட்சியின் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலரும் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள். தேர்தலில் போட்டியிட 70 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில் சொத்து விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 10 பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.இதர கட்சிகள் இதனை விமர்சிக்கும் போது பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,’டெல்லியில் சொந்த வீடு உள்ளவர்கள் அனைவரும் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.புரம் வேட்பாளர் ஷாஸியா இல்மி மிகப்பெரிய பணக்காரர்.43 லட்சம் ரூபாய் மதிப்புடைய பாய்க்கப்பல், 22 லட்சம் ரூபாய் மதிப்புடைய மெர்சிடஸ் ஆடம்பர கார், 12.69 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லியில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1800 சதுர அடி ஃப்ளாட் ஆகியனவும் ஷாஸியாவின் சொத்துவிபரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.அதேவேளையில் அவருடைய கணவர் ஸாஜித் சிராஜ் மாலிக்கிற்கு மும்பையில் பாந்த்ரா உள்ளிட்டபகுதிகளில் 3 ஃப்ளாட்டுகள் உள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து மொத்தம் 1.92 கோடி ரூபாய் சொத்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு சொந்தமாக இரண்டு இடங்களில் நிலமும், வங்கி சேமிப்பும் சேர்த்து 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தும், அவரது மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன.கட்சியின் உத்தர நகர் தொகுதி வேட்பாளர் தேஷ்ராஜ் ராகுவிற்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், நிலங்களும் உள்ளன.
நரேலா வேட்பாளர் பல்ஜித்சிங் மானிற்கு 8.67 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.மாடிபூர் தொகுதி வேட்பாளர் கிரிஷ் சோனிக்கு 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.ரஜவ்ரி தொகுதி வேட்பாளர் ப்ரீத்வால் சிங்கிற்கு 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

No comments:

Post a Comment