Sunday, October 6, 2013

தேஜஸ் பத்திரிகைக்கு கேரள அரசின் மிரட்டல்!


thejகோழிக்கோடு: சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சக்திப்படுத்தலுக்காக கடந்த  7 ஆண்டுகளாக மலையாள பத்திரிகை தளத்தில் ஒரு போராட்டத்தை நடத்தி வரும் நாளிதழ் தேஜஸ்.
இப்பத்திரிகையில் வரும் செய்திகள், கட்டுரைகள், தலையங்கங்கள் எதுவும் தேசத்திற்கு விரோதமானதாக இருந்தது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆளும், அதிகார வர்க்கங்கள் நடத்தும் அடக்குமுறைகளையும், அரசின் தவறான கொள்கைகளையும் துணிச்சலுடன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலம் வெளியிட்டு வருகிறது.
மக்கள் விரோதக் கொள்கைகளை திணிக்கும் அரசுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் இது பிடிக்காது அல்லவா? கடந்த இடதுசாரிகளின் ஆட்சியில் அரசு விளம்பரங்களை தடை செய்தார்கள். தற்போது கோழிக்கோடு, திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மூலமாக பிரிட்டீஷார் கொண்டு வந்த 1867-ஆம் ஆண்டைய சட்டப்படி “ஏன் தேஜஸின் பதிவை ரத்து செய்யக் கூடாது?” என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் சக்திப்படுத்துதலுக்காக பாடுபட்டு வரும் தேஜஸ் பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்க முயலும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு பத்திரிகை உலகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தேஜஸ் பத்திரிகையின் மானேஜிங் எடிட்டரும், வெளியீட்டாளருமான பேராசிரியர் பி. கோயா, தலைமை எடிட்டர் என்.பி. சேக்குட்டி, மேலாண்மை இயக்குநர் எம். உஸ்மான், இயக்குநர் ஃபாயிஸ் முஹம்மது ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரமாக பத்திரிகை நிறுவனங்கள் நடத்துவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் அரசியல் சாசனம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment