Tuesday, October 29, 2013

வகுப்புக் கலவர தடுப்பு மசோதா: ஆர்.எஸ்.எஸ்.ஸின் அறிக்கை தேசத்திற்கு எதிரான சவால்! – இமாம்ஸ் கவுன்சில்

aicc
திருவனந்தபுரம்: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் என்று ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடத்திய ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் வளர்ந்து வந்த பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளது. தேசத் தந்தை காந்தியடிகளையும், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களையும் கொலை செய்து அவர்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடியவர்கள் வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்ட மசோதா அல்லோலப்படுத்துவதில் ஆச்சரியமில்லை.
சமூகத்தின் அமைதியை கெடுக்கும் இத்தகைய அற்பர்களின் ஜம்பங்கள் எதுவும் தங்களது துணிச்சலை பாதிக்காது என்பதை பொறுப்புடையவர்கள் நிரூபித்து காட்ட வேண்டும்.
ஹிந்து, முஸ்லிம், புத்தன் என்று இந்திய மக்களை பிரித்து அதன் மூலம் பிரிவினைவாதத்தை சக்திப்படுத்தும் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சிகளை காணாதது போல் நடித்தால் ஒரு மாபெரும் துயரத்தை நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கொடிய கொலைகளையும், இரத்தத்தை ஓடச் செய்வதையும் தங்களது வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்வது முரண்பாடானது.
ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாக குழுவில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிக்கைகளும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் மக்கள் விரோத தீவிரவாதச் செயல்களை தோலுரித்துக் காட்டும் அமைப்புகளை அழிப்பதற்கான முயற்சி மட்டுமே ஆகும்.
இவ்வாறு இமாம்ஸ் கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment