Monday, October 28, 2013

வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் மோடி இந்தியாவை சிறப்பாக வழிநடத்த முடியாது! – நியூயார்க் டைம்ஸ்

nyt
நியூயார்க்: குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி வந்தால் அவரால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம் கூறுகிறது.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் எழுதியிருப்பது:
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான திறமையை மோடி வெளிப்படுத்தவில்லை. மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்பவராக அவர் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.
மோடியை ஏற்றுக்கொள்ளாததால்
17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் விலகிச் சென்றுள்ளது. மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் மோடி ஏற்படுத்தி வந்தால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த அவரால் முடியாது.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கூறப்படும் சாதனைகளை முழுவதுமாக ஏற்க முடியாது.
நாட்டிலேயே குஜராத்தில்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால் மற்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது, குஜராத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கின்றனர்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பான மோடியின் எழுச்சி, இந்தியர்கள் பலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக, 14 கோடி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment