Thursday, October 3, 2013

எகிப்து: இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் பேரணி!

கெய்ரோ: இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர கோரி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்ஸி இராணுவ சதிப் புரட்சி மூலம் அநியாயமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இராணுவத்திற்கு எதிராக பேரணி தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்துடன் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் நுழைந்ததாக அல்ஜஸீரா கூறுகிறது. இராணுவத்திற்கு எதிராக
போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான அடையாளமாக தஹ்ரீர் சதுக்கத்தில் நேற்று நடந்த பேரணி அமைந்தது என்று செய்திகள் கூறுகின்றன.
முர்ஸியை அநியாயமாக பதவியில் இருந்து நீக்கிய பிறகு நாடு முழுவதும் கண்டனப் பேரணிகள் நடந்தேறின. அதேவேளையில் முர்ஸிக்கு எதிராகவும், இராணுவத்திற்கு ஆதரவாகவும் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment