Monday, September 23, 2013

குஜராத் படுகொலைகளுக்காக வருத்தப்படாத மோடி : காந்தியின் பேத்தி ஆதங்கம்!


குஜராத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்காக,  துளியளவும் வருத்தமோ வலியோ அடையாத
மோடியைப் பார்த்து ஆச்சரியப்படுவதாகக் கூறியுள்ளார்  மகாத்மா காந்தியின் பேத்தியான 78 வயது தாரா காந்தி பட்டாச்சார்யா.
ஓர் அரசியல்வாதியாக, ஒரு மனிதராக, ஒரு குஜராத்தியாக இருந்தும் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் குறித்து அவரு(மோடி)க்கு எந்தவித வருத்தமோ, வேதனையோ ஏற்படாதது வியப்பளிக்கிறது என்று சொல்கிற தாரா காந்தி, காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"மோடி பேசுவதை சற்று தூரத்திலிருந்து கேட்டேன்; நான் அவரைப் பற்றி தீர்ப்பளிக்க விரும்பாவிட்டாலும், குஜராத் இனப் படுகொலைகள் குறித்து அவர் முகத்தில் எந்த வருத்தத்தையும் நான் பார்க்கவில்லை" என்று தாரா குறிப்பிட்டார்.

இனப்படுகொலைகளுக்குப் பின்னர், சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகிவிட்ட மக்களின் அகதிமுகாம்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன என்றும் தாரா குறிப்பிட்டார்.
இனப் படுகொலைகளுக்கு ஆளான மக்களை 'கார்ச் சக்கரத்தில் சிக்கிய நாய்க்குட்டிகள்' என்ற மோடியின் வரணனை மிகவும் கேவலமான சொல்லாடல் என்றார் தாரா.
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது ஜனநாயக விழுமங்களுக்கு அபாயமானதா? என்ற கேள்விக்கு விடையளித்த தாரா காந்தி "யாரையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை; பிரதமர் பதவிக்கு வருகிறவர்கள் கருணையும் வலிமையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment