புதுடெல்லி:பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணைக் கோரி அப்பகுதி மக்கள் பேரணி நடத்தினர். ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேசனை நோக்கை அமைதி பேரணி நடந்தது.கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களும், அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்துகொண்டனர்.பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என்று தற்போது தாங்கள் நம்புவதாக கூறும் பேனர்களை மக்கள் கையில் பிடித்திருந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து வருந்துவதாகவும், போலீஸ் கூற்றுக்களின் அடிப்படையில் என்கவுண்டருக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி செயலாலர் மஹ்பூப் ஸஹானா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,’குஜராத்தில் 17 போலி என்கவுண்டர் படுகொலைகளுக்கு காரணமான பொய்யான தகவலைக் கொடுத்த ஐ.பியின் சிறப்பு இயக்குநர் ராஜீந்தர் குமார் தாம்,
பாட்லா ஹவுஸில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக போலித் தகவல் அளித்துள்ளார்.பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் தொடர்பாக ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை தொடரும் ஒரு மாத விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை இதர அமைப்புகளுடன் சேர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் என்றுஅவர் கூறினார்.
பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர் சம்பவத்தில் நீதி விசாரணை கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா ஸ்டுடண்ட்ஸ் அசோசியேசன்(ஐஸா), ரெவ்லுயூசனரி யூத் அசோசியேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லி ஜந்தமந்தரிலும் தர்ணா போராட்டத்தை நடத்தின.
No comments:
Post a Comment