Saturday, July 27, 2013

புது கட்சி தொடங்கிய விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே

லண்டன் : அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உளவு ரகசியங்களை
வெளியிட்டதன் மூலம் புகழடைந்த விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்ஜே ஆஸ்திரேலியாவில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
தன் விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்ஜே அமெரிக்காவின் கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டனில் உள்ள ஈக்குவாடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சார்ந்த அசாஞ்ஜே இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா தேர்தலில் போட்டியிடும் நோக்கில் லண்டனில் இருந்த படியே வீடியோ கான்பரஸ் மூலம் விக்கி லீக்ஸ் பார்ட்டியை தொடங்கி உள்ளார். நாட்டில் வெளிப்படையான கொள்கைகள் அமைய தம் கட்சி பாடுபடும் என்று அசாஞ்ஜே தொடக்க விழாவில் கூறினார்.

ஆஸ்திரேலியா நாட்டு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஓராண்டுக்குள் பதவி ஏற்க வேண்டும். அசாஞ்ஜே வெற்றி பெற்றால் எப்படி கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து பதவியேற்க முடியும் என்று அவரது விமர்சகர்கள் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment