Tuesday, July 23, 2013



mamata-banerjee2_15
ராம்புர்ஹத்:பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நரேந்திர மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிர்பும் மாவட்டம் ராம்புர்ஹத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசியதாவது
: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பற்றி எதுவுமே பேசாத காங்கிரஸ், இப்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அவர் மீது பல்வேறு குற்றங்களை சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் நாடகமாடுகின்றன. நரேந்திர மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஆதரவு அளிக்காது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் சுயலாபம் கருதி, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குத்புதின் அன்சாரியை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தது. ஆனால் பிற்காலத்தில் அவரைக் கைவிட்டு விட்டது என்றார் மம்தா. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மம்தா பட்டியலிட்டார். நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு 73 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment