Wednesday, July 24, 2013

மசூதிக்கு தீ வைப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று உள்ளது.
இதன் வளாகத்தில் முஸ்லிம்களின் மசூதி ஒன்றும் உள்ளது. இம் மசூதியில் நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாகவும் இதில் அம்மசூதியில் இருந்த தொப்பிகள், பாய்கள், மின்விசிறிகள் பலவும் தீயில் எரிந்து நாசமாகின என்றும் சொல்லப்படுகிறது
இன்று அதிகாலைத் தொழுகை நடத்த சென்ற அப்பகுதி மக்கள் தங்கள் மசூதியில் தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்களின் இந்தச் செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

கேணிக்கரை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், ‘‘பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சுற்றுப் புறச் சுவர் உள்ளது. அத்துடன் இரவு நேர காவலாளியும் உள்ளார். அப்படி இருக்கும் போது,  இது போன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
மசூதியில் தீவைத்த மர்ம நபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனவென்றும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்'' என்றும் மயில்வாகனன் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment