பாட்னா:இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியது: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) குறிக்கோள்கள், செயல்பாடுகள் குறித்து அறியாததால் அந்த இயக்கத்தைப் பற்றி பல
ஒரு கட்சியின் மூலக் கருவாக ஆர்.எஸ்.எஸ்ஸை எண்ணுவதும் தவறு. ஒரு அரசியல் தலைவர் அல்லது அரசியல் கட்சியால் ஒரு நாட்டை வலுவுள்ளதாக உருவாக்க முடியாது. சரியான தத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தினால்தான் நாடு வலுவடையும். மாற்றம் என்பது சமூகத்திலிருந்துதான் ஏற்படுமே தவிர, ஒரு அரசியல் கட்சியால் ஏற்பட்டுவிடாது. அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றிவிடுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது என்று மோகன் பாகவத் கூறுகிறார்.
No comments:
Post a Comment