Thursday, July 25, 2013

இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவரின் பேட்டிக்கு ராமகோபாலன் கண்டனம்!


சென்னை: சென்னையில் பாஜகவின் மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று முஸ்லிம்கள் கூட்டமைப்பின் தலைவர் பேட்டியளித்திருந்தார்.
இதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இஸ்லாமிய சமய, சமுதாய, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் பஷீர், பத்திரிகை பேட்டியில் பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை செய்தவர்கள் முஸ்லீம்கள் எனக்கூறி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப் பதாக குற்றம் சாட்டியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் காவல் துறை அதிகாரிகள் குற்றவாளி களின் புகைப் படத்தை வெளியிட்டு, அவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் தகுந்த பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி காவல்துறை அறிவிக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்! கடந்த 25 ஆண்டுகளாக இந்து இயக்கத்தைச் சேர்ந்த 148 பேரை இதுபோல் கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவோ, அல்லது காவல்துறை, அரசு அதிகாரிகளை மிரட்டவோ, திசை திருப்பவோ ஊடகங்களில் இதுபோன்ற கருத்தை பஷீர் பதிவு செய்துள்ளதாக இந்து முன்னணி எச்சரிக் கிறது.
அத்வானியின் ரதயாத்திரையில் பைப் வெடிகுண்டு சதியில் தேடப்பட்ட முதன்மையான, முக்கியமான குற்ற வாளி கைது செய்யப்பட்டது எப்படி? அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தது யார்? ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையையும் காவல் துறை எடுக்க முடியாது என்பது தான் உண்மை!
டாக்டர் அரவிந்த ரெட்டியும், வெள்ளையப்பனும், ஆடிட்டர் ரமேஷும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். அவர்கள் கொலையை அடுத்து வேலூரிலும், சேலத்திலும் இயக்கத்தினர் மட்டுமல்ல பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நற்குடியில் பிறந்து, நாடுபோற்ற வாழ்ந்தவர்கள். அடுத்து அடுத்து நடந்த இந்த இரண்டு கொடூரக் கொலைகளைப் பார்த்தத் தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்"
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment