2014 தேர்தலில் பாஜக வெற்றிப்பெற, ஹிந்துக்களை ஒன்று படுத்தவும் முஸ்லிம்களை கூறு போடவும் வேண்டும்.ராமர் கோவில் கட்டுவது, இந்திய தேசத்தின் அஜெண்டாவாகும், அதை செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே பாஜகவை சேர்ந்தது, என்று மேலும் கூறுகிறார், சுவாமி.
தனியார் டிவி சேனல் ஒன்றில் (21/07) பேட்டியளித்த சுவாமி, தற்போது முஸ்லிம்கள் பிரிந்துக் கிடக்கிறார்கள், ஷியா முஸ்லிம்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது, என்றார்.
மதத்தின் பெயரால் அரசியல் செய்வது, நாட்டுக்கு ஆபத்தில்லையா? என்ற கேள்விக்கு மத ரீதியாக ஏன் அரசியல் செய்யக்கூடாது? என எதிர்க்கேள்வி கேட்டார், சுவாமி.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீது அநியாயம் நடந்து வருவதாக சொன்ன சுப்ரமணிய சுவாமி,
இந்தியாவில் உள்ள 14% முஸ்லிம்களில் 7% (ஷியா முஸ்லிம்களை) பேரை நம் பக்கம் கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது? எனக் கேட்டார்.
ஹிந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும், முஸ்லிம் வாக்கு வங்கியை கூறு போடவேண்டும், என்பதை தாரக மந்திரமாக செயல்படுத்தினால், 2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிக்கு வருவது உறுதி என்றார்,
அயோத்தி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்:
மோடி பிரதமரானால், கோவில் கட்டப்படுவது உறுதி,
இது, இந்தியாவுடைய அஜெண்டாவாகும், இதை செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே பாஜகவை சேர்ந்தது, என்றார், சு.சுவாமி.
No comments:
Post a Comment