Tuesday, July 23, 2013

பீகாரில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பாளர் கிலி: எம்.எல்.ஏ சஸ்பெண்ட்!


பாட்னா:பீகாரில் கூட்டணி ஆட்சி நஷ்டமடைந்த அங்கலாய்ப்பு தீரும் முன்னர், கட்சியில் எதிர்ப்பாளர்கள் உருவாகிவிடுவார்களோ என்ற பயமும் பா.ஜ.கவை வேட்டையாடி வருகிறது. பீகாரில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் மோடியை விமர்சித்த பா.ஜ.க எம்.எல்.ஏ அமர்நாத் காமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுஷில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட அமர்நாத் மீது கட்சி நடவடிக்கை எடுத்ததால் இதர எம்.எல்.ஏக்கள் கடுப்பில் உள்ளனர்.
சுஷில் மோடி பதவி வெறிப்பிடித்தவர் என்பது அமர்நாத்தின் விமர்சனமாகும். கட்சிக்கு குஜராத்தில் ஒரு மோடி உள்ளதுபோலவே பீகாரிலும் ஒரு மோடி உள்ளார். பீகாரில் உள்ள மோடி எங்களை அழிக்க நினைக்கிறார். சுஷில் மோடி கட்சியை ஹைஜாக் செய்துள்ளார்.
கட்சி தலைவர்கள் வளருவது அவருக்கு பிடிக்காது. ஆகையால் தொண்டர்களையும், தலைவர்களையும் அவர் அடக்கி ஒடுக்குகிறார். இதனால் தான் அவரை விமர்சித்ததாக அமர்நாத் தெரிவித்துள்ளார்.
சுஷில் மோடி கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் சர்வாதிகாரி போல நடந்துகொள்வதாக கட்சி தொண்டர்களிடையே பேச்சு உள்ளது. நேற்று முன் தினம் ரோஹ்தஸ் மாவட்டத்திற்கு வருகை தந்த சுஷில் மோடியை, பா.ஜ.கவினர் கோஷமிட்டு எதிர்கொண்டனர்.
அதேவேளையில் தங்களது எம்.எல்.ஏக்களை ஐக்கிய ஜனதா தளம் அபகரிக்க முயற்சிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது.

No comments:

Post a Comment