பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவ அணி செயலாளராக இருந்த அரவிந்த் ரெட்டி அண்மையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியான தொடர் படுகொலை என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படுகொலைக்கு பெண் விவகாரம் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முப்பத்தெட்டு வயதான அரவிந்த் ரெட்டி கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிக்கத்தக்கது. கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .
கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . தீவிரவாதிகள் இக்கொலையை செய்திருக்கக் கூடும் என்று பேசப்பட்டது.
பின்னர் இது குறித்த விசாரணையில் பெண் விவகாரத்தால் இப்படுகொலை நடந்திருப்பது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் பழைய நகர் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
No comments:
Post a Comment