அங்காரா:இரண்டுவார காலமாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களை எதிர்கொள்ள ராணுவத்தை களமிறக்குவோம் என்று துருக்கி துணை பிரதமர் அறிவித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸ் தோல்வியடைந்தால் ராணுவத்தை இறக்கவேண்டும் என்பது அரசின் முடிவாகும்.போராட்டம் சட்டவிரோதம் என்று அவர் கூறினார்.
காஸி பூங்காவில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியதை கண்டித்து நேற்று எதிர்கட்சி தொழிலாளர் அமைப்புகள் முழு அடைப்பை நடத்தின.டாக்டர்களும், பொறியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
அதேவேளையில், இஸ்தான்புல்லில் அரசை ஆதரித்து பிரம்மாண்ட பேரணி நடந்தது. நாட்டில் வன்முறையை உருவாக்க விரும்பும் சக்திகளே போராட்டத்தின் பின்னணியில் செயல்படுவதாக மாநாட்டில் உரையாற்றிய துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். இந்த பேரணியும், மாநாடும் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக அல்ல என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரம் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment