Monday, February 4, 2013

சரணடைவதை தடுக்க சுனில் ஜோஷியை கொலைச் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ!


புதுடெல்லி:சரணடைவதை தடுக்கவே பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கொலைச் செய்தனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.
குண்டுவெடிப்புகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு லட்சியத்தை பரப்புரைச் செய்யப் போவதாக சுனில்ஜோஷி இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடம் கூறியுள்ளான். ஆனால் இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஜோஷியின் கருத்தில் மாறுபாடு கொண்டனர். ஏற்கனவே சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூரிடம் ஜோஷி தவறாக நடக்க முயற்சித்தான். மேலும் மதுபான வியாபாரத்தில் ஏற்பட்ட தர்க்கமும் ஜோஷி மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ராஜேந்தர் சவுத்ரி விசாரணையின் போது இதனை என்.ஐ.யிடம் ஒப்புக்கொண்டுள்ளான். 2007 அக்டோபர் மாதம் நடந்த அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பிறகு ஜோஷி சரணடைய முடிவுச் செய்திருந்தான். சரணடைவதுக் குறித்து ஜோஷி விருப்பம் தெரிவித்து சிலவாரங்கள் கழித்து கொல்லப்பட்டுள்ளான்.கொலைச்செய்த உடனேயே தேவாஸில் ஜோஷியின் வீட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் அவனுடைய பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர். ஹிந்துத்துவா தீவிரவாதத்தின் சூத்திரதாரியாக விளங்கிய ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாருக்கும், சுவாமி அஸிமானந்தாவுக்கும் இடையேயான உறவுக்கு இடைத்தரகராக செயல்பட்டவன் சுனில் ஜோஷி. ஜோஷியுடன் நெருக்கமாக இருந்த சுவாமி அஸிமானந்தாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.ஜோஷியை கொலைச் செய்ய உத்தரவிட்டது இந்திரேஷ்குமார் தான் என்று சுவாமி அஸிமானந்தா குற்றம் சாட்ட இதுவே காரணம்.
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் சுனகடான் பகுதியில் வைத்து ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டான். பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய லோகேஷ் சர்மா ஓட்டிய பைக்கில் வந்த ராஜேந்தர் நைன் எம்.எம் துப்பாக்கியால் ஜோஷியை சரமாரியாக சுட்டான். இந்த ஆயுதங்களையும், ஏராளமான வங்கி அக்கவுண்ட் புக்குகளையும், செக் புக்குகளையும் என்.ஐ.ஏ பறிமுதல் செய்துள்ளது.

No comments:

Post a Comment