Sunday, February 3, 2013

உளவுத்துறை அமைப்புகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!


SC
புதுடெல்லி:புலனாய்வுத்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரனைக்கு வந்தது. மேற்கத்திய நாடுகளைப் போன்று உளவுத்துறை, புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் மற்றும் இதர அரசியல் சாசன அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக்கோரி பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் அனில் திவான் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்டனர்.  அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்புகள் தவறாக வழி நடத்தப்படுவதை தடுக்க அவற்றை அரசியல் சாசன அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment