
கெய்ரோ:ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அடுத்த மாதம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு குழுவின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள செல்ல உள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஈரான் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் முதன் முதலாக ஈரான் அதிபர் ஒருவர் எகிப்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் எகிப்து ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை ஈரான் முறித்தது. இந்நிலையில் எகிப்தில் புரட்சி வாயிலாக சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அகற்றப்பட்டு இஃவானின் முஹம்மது முர்ஸி அதிபராக பதவியேற்றார். கடந்த ஆகஸ்டில் முர்ஸி ஈரான் சென்றிருந்தார். பல ஆண்டுகளுக்கு பின்னர் ஈரான் சென்ற முதல் எகிப்திய அதிபர் முர்ஸி ஆவார். முர்ஸியின் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment