புதுடெல்லி:பெண்கள் வீட்டுவேலையை மட்டும் கவனித்தால் போதும் என்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்தின் அறிக்கை முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(என்.டபிள்யூ.எஃப்) தேசிய தலைவர் ஷாஹிதா தஸ்னீம் மற்றும் பொதுச் செயலாளர் ஃபரீதா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியிருப்பது: தேவதாஸி, சதி உள்ளிட்ட சமூக கொடுமைகளின் பிரதிநிதிகளான ஒரு இயக்கத்தின் தலைவரிடமிருந்து இத்தகைய அறிக்கை வெளியானதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பெண்களை வெறும் அடிமைகளாக மட்டுமே கருதும் மனுதர்ம பாரம்பரியத்திற்கு நாட்டை அழைத்துச் செல்வதே ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சியாகும். திருமணம் என்பது மதரீதியான, சமூகரீதியான ஒரு ஒப்பந்தம் என்றாலும், பெண்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மீறுவதற்கு அனுமதியில்லை என்று என்.டபிள்யூ.எஃப் தலைவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment