Tuesday, January 8, 2013

ஒரே வகையைச் சார்ந்த வெடிக்குண்டுகளை உபயோகித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!


rss 1
புதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஒரே வகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக தடவியல் சோதனை அறிக்கை கூறுகிறது.
2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மலேகான், 2006 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ், 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், 2008-ஆம் ஆண்டு குஜராத்தில் மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளில் உபயோகிக்கப்பட்ட குண்டுகள் ஒரே ரகத்தைச் சார்ந்தவை என்பது ஃபாரன்சிக்(தடவியல்) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடம் இது தொடர்பான ஆய்வை நடத்தியது. பரிசோதனை முடிவுகள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
வெடிக்குண்டு, குண்டுகளை தயாரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பம், வெடிக்குண்டு கண்டெய்னர், எல்க்ட்ரானிக் சர்க்யூட் உள்பட குண்டுவெடித்த முறையில் கூட ஒரே பாணி கையாளப்பட்டுள்ளதாக ஃபாரன்சிக் அறிக்கை கூறுகிறது. குண்டுவெடிப்பிற்கு ஆர்.டி.எக்ஸ் மற்றும் டி.என்.டி வெடிப்பொருட்கள் முக்கியமாக உபயோகிக்கப்பட்டுள்ளன.
மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் ஒரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு வயர்களில் இணைக்கப்பட்ட ஸ்க்ரூ செய்த பேட்டரிகள் எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொடாஸா குண்டுவெடிப்பிலும் இதே முறை கையாளப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பிற்கு சிங்கிள் சிலிண்டர் மோட் உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர குண்டுவெடிப்புகளில் டபிள் சிலிண்டர் மோட் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெடிப்பொருட்களின் மீதான முத்திரை கூட ஒரேபோல உள்ளன.
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் ஓல்பாட் வாட்ச் குண்டை வெடிக்க வைக்க உபயோகிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் இதே முறை கையாளப்பட்டது. அதேவேளையில் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நோக்கியா 6030 மாடல் மொபைல் ஃபோன் உதவியுடன் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன.
2008 மலேகான், மொடாஸா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் வெடித்த டெட்டனேட்டர்களின் சிதிலங்களில் ஐ.டி.எல் 21 manufactures என்று எழுதப்பட்டுள்ளது என்று தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment