Tuesday, January 8, 2013

2006 மலேகான்:ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்ய என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் கோரிக்கை!


innocent muslims
மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பெயரால் அநியாயமாக கைது செய்யப்பட்ட அப்பாவிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கும் என கருதப்படுகிறது.
மலேகான் குண்டுவெடிப்பில் நேரடியாக ஈடுபட்ட டான்சிங், லோகேஷ் சர்மா, மனோகர் சிங், ராஜேந்திர சவுத்ரி ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து கூடுதலான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து என்.ஐ.ஏ முஸ்லிம் இளைஞர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் என கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தாம் என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் கொலைச் செய்யப்பட்ட மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே ஆவார். பின்னர் 2010-ஆம் ஆண்டு சுவாமி அஸிமானந்தா, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தான். ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார், சாத்வி பிரக்யாசிங், கர்னல் புரோகித், ஹிந்துத்துவா தீவிரவாதிகளாலேயே கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பெயர்களை சுவாமி அஸிமானந்தா வெளியிட்டார்.
ராஜேந்திர சவுத்ரியை கடந்த ஆண்டு இறுதியில் என்.ஐ.ஏ கைது செய்தது. இவனிடமிருந்து கூடுதல் தகவல்கள் கிடைத்தன.

No comments:

Post a Comment