Friday, June 8, 2012

சிரியா:அமெரிக்க-ஐரோப்பிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்!


us-europe ambassadors pulled out syria »
பெய்ரூத்:சிரியா தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாடுகளின் பிரதிநிதிகளை வெளியேற்றியுள்ளது பஸ்ஸார் அரசு.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்பெயின், பல்கேரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரக பிரதிநிதிகளை சிரியா அரசு வெளியேற்றியது.
ஹவ்லா கூட்டுப் படுகொலையை கண்டித்து இந்நாடுகள் சிரியாவின் தூதரக பிரதிநிதிகளை அண்மையில் வெளியேற்றியிருந்தது. ஹவ்லா கூட்டுப் படுகொலையில் சிரியா அரசுக்கு பங்கில்லை என்றும், தீவிரவாத அமைப்புகள் இந்த படுகொலையை நிகழ்த்தியதாக பஸ்ஸார் கூறினார்.
இந்நிலையில், நான்கு மாகாணங்களில் துயர் துடைப்பு ஆர்வலர்களுக்கு சிரியா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலை ஜீவகாருண்ய பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா அதிகாரி ஜான் கிங் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக சிரியா அதிகாரிகள் ஐ.நா அதிகாரிகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனிடையே, சிரியா பிரச்சனைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலுவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்த அரப்லீக் பொதுச்செயலாளர் நபீல் அல் அரபி நியூயார்க் சென்றுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சிரியா அதிகாரிகள் மீது ராணுவ நடவடிக்கை உள்பட வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய சூழல் தற்பொழுது நிலவுவதாக அரப்லீக் தலைவர்கள் நேற்று முன் தினம் பரிந்துரைத்தனர். ஆனால், சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை தேவையில்லை என்ற முடிவில் ரஷ்யாவும், சீனாவும் உள்ளன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் சிரியாவுக்கு எதிரான தீர்மானங்களை வீட்டோ செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment