Friday, June 8, 2012

இஸ்ரேல் செல்லும் அரபு வம்சாவழியைச் சார்ந்தோருக்கு இ-மெயில் பரிசோதனை!


Israel airport security targeting Arabs, Muslims in email checks
டெல்அவீவ்:இஸ்ரேலில் விமானம் இறங்கிய உடனே கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் முன்பு அமர்ந்திருக்கும் அதிகாரி ஜி-மெயில் அக்கவுண்ட் ஓபன் செய்ய கூறிய பொழுது ஃபலஸ்தீன்-அமெரிக்க வம்சாவழியைச் சார்ந்த சாந்த்ராதமரி அதிர்ச்சி அடைந்தார். எங்கும் கேட்டிராத இந்த நடைமுறைக்கு தமரி மறுப்பு தெரிவித்தவுடன் அவர் அடுத்த விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இது தமரிக்கு மட்டும் நேர்ந்த அனுபவம் அல்ல. இதுபோல ஏராளமான ஃபலஸ்தீன் அரபு வம்சாவழியைச் சார்ந்தவர்கள் இஸ்ரேல் விமானநிலையத்தில் சிக்கி அங்கிருந்து வெளியேற நிர்பந்திகப்படுகின்றனர்.
ஃபலஸ்தீன் மக்களிடம் அனுதாபம் கொண்ட எவரும் இஸ்ரேலுக்குள் நுழையக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டு இஸ்ரேல் விமானநிலையத்திற்கு வந்திறங்கும் அரபு வம்சாவழியைச் சார்ந்தவர்களின் இ-மெயில் அக்கவுண்டை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதில் பெரும்பாலும் முஸ்லிம்களே பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நடைமுறை டெல் அவீவில் மட்டுமா? அல்லது இஸ்ரேலின் இதர விமானநிலையங்களிலும் இதே நடைமுறைதானா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே இன ரீதியான பாரபட்சம் காட்டுவதில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை தங்களுக்கு எதிராக நடைபெறும் சத்திட்டங்களை கண்டுபிடிக்க அத்தியாவசியமானது என்று இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.

No comments:

Post a Comment