Tuesday, May 1, 2012

லெபனான் எல்லையிலும் சுவரைக் கட்டும் இஸ்ரேல்!


Israel starts building wall along Lebanese border
டெல்அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் கட்டப்பட்டுள்ள பிரிவினை சுவருக்கு சமமான சுவரை லெபனான் எல்லையிலும் இஸ்ரேல் கட்டத் துவங்கியுள்ளது. லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா அமைதிப்படையின் ஆதரவுடன் இச்சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லை நகரங்களை நோக்கி நடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கவும், மோதலை தவிர்க்கவும் சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது. 2 கி.மீ தூரத்திற்கு கட்டப்படும் இச்சுவருக்கு 10 மீட்டர் உயரமாகும். லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் நகரமான மெதுல்லாவில் குடியிருப்பு மையங்களை பாதுகாக்க சுவர் கட்டப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் அறிவித்தது.

No comments:

Post a Comment