Wednesday, May 23, 2012

ஹஜ் மானியம்:மத்திய அரசின் முடிவு இறுதி தீர்ப்பிற்கு பிறகு! -எஸ்.எம்.கிருஷ்ணா!


Haj Committee of India, presents bouquet to External Affairs Min SM Krishna
புதுடெல்லி:ஹஜ் மானியத்தை நிறுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு கிடைத்த பிறகே மத்திய அரசு அதுக்குறித்து தீர்மானம் எடுக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆல் இந்தியா ஹஜ் கமிட்டி சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கிருஷ்ணாவிடம் செய்தியாளர்கள், “உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்யுமா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹஜ் மானியம் தொடர்பாக இடைக்கால உத்தரவைதான் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இறுதி தீர்ப்பிற்காக மத்திய அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு வந்துவிட்டால் அதுக்குறித்து மத்திய அரசு முடிவை மேற்கொள்ளும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

No comments:

Post a Comment